Friday, December 26, 2008

IT Sector May lose 50,000 Jobs

Over 50,000 IT professionals in the country may lose their jobs over the next six months as the situation in the sector is expected to worsen due to the impact of global economic meltdown on the export-driven industry, a forecast by a union of IT Enabled Services warned.

"...there would be 50,000 job losses (IT and BPO put together) over the next six months," Karthik Shekhar, general secretary of UNITES India, a politically neutral union of ITES professionals said.

The job loss in the IT and BPO sector in the country topped 10,000 in the September-December period, Shekar said.

While employees of medium-sized companies bore the brunt of job losses in the September-December period, it's going to be their counterparts in the big and small firms who would increasingly face the axe in the coming six months, he said.

UNITES India, affiliated to the global union United Network International, suggested that the companies in trouble could resort to salary and incentive cuts without trying to "squeeze" the staff, rather than adopting the "layoff path".

Employees are willing to take such cuts for 12-16 months till the demand picks up again, when such benefits should be restored to them.

Shekhar said senior officials of the industry had concurred with the figure of 10,000 job loses in September-December, stating that it accounted for "bottom five per cent of the performers".

Consultations with the union's counterparts in the US and UK suggested that slowdown would continue to hit the offshore sourcing space, he said.

He said factors like continued slowdown, likely "tax application" to companies outsourcing jobs under the new US regime and tightening in regard to H1B visas were among the key reasons cited for the acceleration in issue of pink slips.


சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்த நிலை மேலும் மோசமடையும் பட்சத்தில் இந்தியாவில் 2009 ஆம் ஆண்டு ஜீன் மாதத்திற்குள் 50000க்கும் அதிகமான ஐடி, பிபிஓ ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம் இருப்பதாக கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

பெரிய ஐடி நிறுவனங்கள் தங்களது பொருளாதார நெருக்கடி காரணமாக செலவினங்களை குறைக்கும் விதமாக ஊழியர்களுக்கு வழங்கி வந்த சலுகைகளை குறைத்து வந்தது. தற்போது ஏற்பட்டிருக்கும் மந்த நிலை நீடித்தால் கட்டாய விடுப்பு எடுக்கும் சொல்லும் நிறுவனங்கள் அடுத்து ஊழியர்களை நிரந்தர பணி நீக்கம் செய்யும் அபாயமும் ஏற்படலாம் என்ற கணிப்பு நிலவுகிறது. பெரிய நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்யாமல் தற்போது பல வழிகளில் செலவினங்களை குறைத்து வருகிறது. சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி காரணமாக புதிய ப்ராஜக்ட் வர தவறினால் நிறுவனங்களுக்கு ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதைத்தவிர வேறு முடிவு எடுக்க முடியாத சூழ்நிலை உருவாக வாய்ப்புகள் இருக்கிறது. பெரிய நிறுவனங்கள் ஒருபுறம் இருக்க சிறிய நிறுவனங்களின் நிலை மிகவும் மோசமடையும் நிலை உருவாகலாம். இதன் மூலம் பல்வேறு தொழில் நுட்ப பொறியாளர்கள் வேலையிழக்ககூடும். இதே போல பிபிஓ நிறுவனங்களுக்கும் இந்த ஆபத்து அதிகம் இருக்க வாய்ப்பு உள்ளது.

கடந்த 3 மாதங்களில் மட்டும் நாட்டில் ஐடி துறையில் மறைமுகமாகவும் நேர்முகமாகவும் 10000த்திற்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ளனர் என்பது தான் உண்மை. பல பெரிய நிறுவனங்களில் கூட ஊழியர்கள் அடுத்த ஒரு வருடத்திற்கு சம்பள உயர்வு மற்றும் போனஸ் இல்லாமலும் வேலை பார்க்க தயாராக இருப்பதாக சில நிறுவனத்தலைவர்களே தெரிவித்துள்ளனர். சம்பள குறைப்பு மற்றும் ஊதிய உயர்வு நிறுத்தம் போன்றவை ஊழியர்களை பெரிய அளவில் பாதிக்காது. ஐடி துறையை பொருத்தமட்டில் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு இடம்பெயர்வது என்பது மிகவும் சாதாரணமான ஒன்று. ஆனால் இந்த பொருளாதார நெருக்கடி தருணத்தில் இது மிகவும் அசாத்தியமாக வாய்ப்புகள் உள்ளன. பல நிறுவனங்கள் தற்போது புதிதாக ஆட்களை எடுக்கும் பணியை அடியோடு நிறுத்தி வைத்துள்ளன. புதிய ஃக்ளைண்டுகள் கிடைக்கும் வரை ஆட்களை பெரிய நிறுவனங்கள் எடுக்க யோசிக்கின்றனர். 2001 ஆம் ஆண்டு இதே போன்ற சூழல் உருவாகி பின்னர் ஒரு ஆண்டுகள் கழித்து நிலை சீரானது. அதைவிட தற்போது நிலை மோசமாக செல்லவும் வாய்ப்புகள் உள்ளது. தன்னை ப்ராஜக்ட் களில் தக்கவைத்துக் கொள்ளாதவர்கள் உடனடியாக அடுத்த நிறுவனத்திற்கு மாறுவது நல்லது என்று உயர் அதிகாரிகள் ஊழியர்களிடம் நேரடியாகவே சொல்லும் கட்டாயத்திற்கு பலரும் தள்ளப்பட்டுள்ளனர். கிடைக்கும் பொழுது நல்ல வாய்ப்பையும் பயன்படுத்தி பாதுக்காப்பான கம்பெனிகளில் அமர்வதே தற்போதுள்ள நிலைமைக்கு முடிவாகும்.

No comments:

Post a Comment

Page Hits

Infomedia

Followers