உலக வங்கி அதிரடி முடிவாக சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸின் சேவையை 8 வருடங்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. சத்யம் கம்ப்யூட்டர்ஸ் உலக வங்கிக்காக எந்த வேலையும் செய்ய வேண்டாம் என்று உலக வங்கி தெரிவித்திருக்கிறது.
ஃபாக்ஸ் நியூஸ் வெளியிட்ட இந்த செய்தியை உலக வங்கியின் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். டேட்டாக்கள் திருடப்பட்டதாக சத்யம் கம்பயூட்டர்ஸ் மீது உலக வங்கி குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் உலக வங்கி ஊழியர்களுக்கு சத்யம் கம்ப்யூட்டர் சர்வீஸசால் ஆதாயம் ஏதும் இல்லை என்றும், டாக்குமென்ட்களை சரியாக ஓப்படைக்கவில்லை என்றும் உலக வங்கி குற்றம் சாட்டியுள்ளது.
இதன் விளைவாக பல வதந்திகள் பரவஆரம்பித்துள்ளன. விப்ரோ நிறுவனம் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தை வாங்குவதகவும், சத்யம் நிறுவனத்தின் தலைவர் ராமலிங்க ராஜூ பதவியில் இருந்து விலகியதாகவும் பரவின. ஆனால் இதை திட்டவட்டமாக அந்நிறுவனம் முற்றிலுமாக மறுத்துள்ளது. இன்றைய பங்குச்சந்தையில் சத்யம் நிறுவன பங்குகள் அதிரடியாக வீழ்ந்தது. பின்னர் சரிவில் இருந்து சற்று மீண்டது. கடந்த வாரம் சத்யம் மேய்தாஸ் என்ற கட்டுமான நிறுவனத்தை வாங்குவதாக தெரிவித்து பின்னர் பின்வாங்கியது நினைவிருக்கலாம்
No comments:
Post a Comment